top of page

உயிர்மூல ஆற்றல் வழி சுகம்பெற

தன்னை உணர வருக

Questions and answers...

நமது மரபுவழி அறிவர்  அறிவியல்  இது,
உலக உயிர்கள்  நலமாக வாழப் போதுமானது

மரபுவழி நலவாழ்வு மையம்

​எண்.31.அண்ணா தெரு, காந்திநகர்,

​ஆவடி, சென்னை 600 054

தமிழ்நாடு, இந்தியா 

மின் அஞ்சல்

thamilavel@ultrafasthealingalchemy.com

மனிதர்கள்  அனைவரும் தங்களின் உடல் துன்பங்களில் இருந்து விடுபடவும், மன இறுக்கங்களில் இருந்து சுகம் பெறவும் உயிர்மூல ஆற்றல் உதவுகிறது. உயிர் மூல ஆற்றலை அறியவும், எளிமையாக உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தவும் உதவுவதே இந்த தளத்தின் நோக்கம்.

 

உயிர்மூல ஆற்றல் என்பது நமது வாழ்வுக்கு அடிப்படையான சக்தி. இது நம்மைப் படைத்த பேராற்றலின் அருள். நம்மைக் காக்கப் போதுமான அற்றலை நமக்குள் வைத்து பேராற்றல் அருளியுள்ளது. தன்னை உணர்ந்த அறிவர்கள், உயிர்மூல ஆற்றலை மேம்படுத்தும் வழிகளை கண்டறிந்து கூறியுள்ளார்கள்.

 

மனிதர்களின் தன்முனைப்பால் உயிர்மூல ஆற்றலை மறந்து, சுய சார்பை இழந்ததே அவனது துன்பங்களுக்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.

அறிவர்கள் வழி சுகமளித்தல், தனித்தன்மை வாய்ந்தது. இறைவழி அறிவர்கள் கண்டறிந்த சுகமளிக்கும் கலை,  எந்த ஒரு சுகமளிக்கும் கலையுடனும் ஒப்பிடுவது சரியல்ல. நமக்குள் இருக்கும் இறைத்தன்மை மூலம் நடக்கும் நன்மை இது. இது மனித அனுபவ அறிவுக்கு உட்பட்டதல்ல.

விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நேரில் அல்லது தொலைவில் இருப்பவர்களை உயிர்மூல ஆற்றலால் சுகப்படுத்த இயலும். ஒரே நேரத்தில் பலருக்கு உடல்நலம், மனநலம் புத்துணர்வு கிடைக்க செய்யும். மனித அறிவைக் கொண்டு எந்த விதமான முயற்சியோ, பயிற்சியோ இல்லாது உயிர்மூல ஆற்றலைக் கையாளலாம்.

பக்க விளைவுகள் மேலும் சுகம் பெறுவது தான். சுகமளிப்பவருக்கோ அல்லது வாங்குபவருக்கோ எந்த பாதிப்புகளும், பயமும் வராது. மற்ற அறிவு சார்ந்த சுகமளிக்கும் முறைகள் போல சுத்தப்படுத்தும் தொல்லையோ, கர்மா பற்றிய கவலையோ தேவையில்லை.

இறையாற்றலுக்கு நன்றியும், பணிவும், உண்மையும் இருந்தால் போதுமானது.

மனிதனாக ஒரு பயணம்

 

நம் உடல்தனை, உருவாக்கிய இறைஆற்றல்க் கூறு, உயிர்மூல ஆற்றலாக

உள்ளது. அது தன்னை பாதுகாத்துக் கொள்ளும், புதுப்பித்துக் கொள்ளும்.

 

பேரிறையின் தன்மைகளை முழுமையாக கொண்ட சிற்றிறை அது.  தன்னைத் தானே சுவைக்கப் பிறந்தது. இயற்கை என்று தான் படைத்த அனைத்து இன்பத்தையும், சிற்றிறையாக இருந்து அனுபவித்து பின் தன்னை உணர்ந்து முழுமையில் இணைய அதன் பயணம் முழுமையாகிறது. இயற்கை எனும் ஐந்து மூலக ஆற்றல் சிற்றிறைக்கு  நலம் கொடுக்கவே உருவாக்கப்பட்டது.

 

சிற்றிறை பகுதியின் விளைவான மாயையால் தன்னை மறந்து, ஆணவத்தால் செயல் புரிந்து முழுமையின் தொடர்பை இழந்து நிற்பதே மனிதனின் அவல நிலை.

 

இந்நிலையிலேயே, இறைஞானங்கள் மறக்கடிக்கப்பட்டு,  மனம் எனும் முரணுக்குள் சிக்கி நன்மை, தீமை - நல்லது கெட்டது என பிரித்துப் பார்த்து, தனக்குத் தானே எதிரியாகி, தூன்பத்துக்கு ஆளாகி, இறைத் தொடர்பை இழந்து, பொய்யான மரணத்துக்குள் விழுந்து, பொய்யான பிறவித் துன்பங்களை உண்டாக்கிக் கொள்கிறான் மனிதன்.

 

இந்நிலையில், மனித நிலையிலிருந்து சிற்றிறையை மீட்கவே, அதற்கு தன்னை உணர்த்தவே,பேரிறை தனது கருணையால், நோய்களையும், இயற்கை மீட்டெடுப்புகளையும் உண்டாக்குகிறது. நோய்களும், விபத்துகளும்,  பேரிடர்களும் விழிப்படையாத மனிதனின் குறை அறிவால் துன்பமாக, அறியப்படுகிறது.

 

தன்னை உணர்ந்த மனிதன், இதை தான் மேல் நிலை அடைய இறைவன் தந்த பாடங்களாக, அறிவுறுத்தலாக உணர்ந்து, தன் இறைஞானங்களை,  மனதின் தீமைகளில் இருந்து விடுவித்து, மேன்மைப்படுத்தி,  நன்றியுணர்வுடன்  இறைவழிகாட்டுதல்களைப் போற்றி, பாதுகாத்து மேலும் இறைக்கு நெருக்கமாக்கி கொள்கிறான்.

 

தனது புரிதலால் மனிதன், ஐந்து மூலக ஆற்றலைக் கட்டுப்படுத்தி, தனது உடல் எனும் தளையைத் தாண்டி, முழுமையுடன் இணைகிறான். மீண்டும் இறைநிலை அடைகிறான்.

 

தனது பயணத்தில், உடன் வரும் மற்றவர்களுக்கு, தனது புனிதப் புரிதல் மூலம் வழிகாட்டுபவர்களையே சித்தர்களாகவும், இறைவழி அறிவர்களாகவும், ஞானமடைந்தவர்களாகவும் பார்க்கும் ஒவ்வோர் மனிதனும், தானும் அடைந்தே ஆகவேண்டிய நிலையது என, உணர்தல் வேண்டும்.

  • Instagram
  • Facebook
  • YouTube
          அறிவர்வழி தீர்வுகள்


 

© 2026 by Ultrafast Healing Alchemy. Powered and secured by Wix

  • b-facebook
  • Twitter Round
bottom of page