அதிவிரைவாக, எளிதாக, மகிழ்வாக மாற்றிப் பிறக்கும் அறிவர்வழி
தமிழவேள் வணக்கங்கள்.
அகிலத்த்தில் என்னுடன் பயனிக்கும் அனைத்து உயிர்களுடைய நலமும் எனது நலத்துடன் தொடர்புள்ளது என அறிந்ததால் பகிர்கிறேன்.
எனது கடந்த முப்பத்தைந்து ஆண்டு மருத்துவத் தொழிலில் நான் கற்ற மூலிகை மருத்துவம் , சித்த மருத்துவம், வர்ம மருத்துவ பயிற்சி, அக்குபஞ்சர், ரிப்ளக்சியாலஜி, மலர் மருத்துவம் தந்த அனுபவம் மற்றும் படிப்பறிவின் ஊடாக நான் கண்டறிந்த உண்மைகளை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.
விழிப்புணர்வுடன் கவணித்த போது மருந்துகள், பத்தியங்கள், நுட்பங்கள் ஆகியவற்றால் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதை, தடுக்கப்படுவதை, நீக்கப்படுவதை கண்டேன்; ஆனால், மகிழ்ச்சி, நிம்மதி, நலவாழ்வு ஆரோக்கியம் போன்றவை எட்டாக்கனியாகவே இருப்பதை கண்டேன். நோய்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் வளர்வதையே, அல்லது மீளாத் துயரில் மனிதன் அழுந்திக் கிடப்பதையே காண்கிறேன்.
அதே நேரம் மருந்து மாத்திரைகளின் , நுட்பங்களின் உதவியின்றி பல வேளைகளில் சுகம் பெறும் நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. இதற்கான காரணங்களை ஆழமாகத் தேடி, சான்றோர்களின் வாழ்வியலைச் சிந்தித்துணர்ந்த போது இயற்கை மற்றும் படைப்பாற்றலின் வழிகளையும் மனிதப் பிறவியின் நோக்கத்தையும் பற்றிய புரிதலைப் பெற்றேன்.
எனது இயற்கை மற்றும் இறை குறித்த புரிதலுக்கு பின், மனிதர்களின் உடல், மனத் துன்பங்களை நீக்கவும் அவர்களது ஆன்மத் தூய்மை மற்றும் படைப்பாற்றலுடன் உள்ள தொடர்பை மேம்படுத்தவும் நன்மையை நாடி வருவோர்க்கு நான் உதவுகிறேன். கடந்த 2002 முதல் இந்த இறைப்பணியினை நான் செய்து வருகிறேன்.
நாளுக்கு நாள் எனது இறை பற்றிய புரிதல் மேன்மை பெறுகிறது. எனது இறை பற்றிய புரிதலால் பெற்ற ஆற்றலை கொண்டு தேடல் உள்ளவரை இறைவழி வாழ்வியல் அறிவராக உயர்த்தவும் செய்கிறேன்.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன்னை உணரவும், தன்னில் உயரவும் தகுதியுள்ளவரே.
ஆன்மாவின் குற்றங்களை நீக்கி, மனதின் கேடுகளை களைந்து தன் மனதின் உண்மையான இயல்பை உணர்பவர், தன் இயல்பில் வாழ்பவர் வாழ்வியல் அறிவராக மேன்மை பெறுகிறார்.

கேட்டதும் கிடைத்திடும் நன்மைகள் பெற இறையுடன் பழகுங்கள்
உயிர்மூல ஆற்றல் உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமானது.
மனிதர்கள் மட்டுமல்லாது, அனைத்து உயிர்களிடமும் இயைந்து வாழ, பகிர்ந்து கொள்ள இறையாற்றலை உணர்ந்தவர்களால், தன்னை உணர்ந்தவர்களால் மட்டுமே இயலும்.
படைக்கப்பட்ட அனைத்தும் படைத்த இறைத் தன்மைக்கு கட்டுபட்டதே.
உங்கள் உண்மை இயல்பை, இறை குணங்களை உணர்ந்து மேம்படுத்திக் கொண்டால் இறையாற்றலால் எல்லாம் சாத்தியமே.
தமிழவேள் ஆகிய நான் இறைவழியில் சுகமளிப்பவன்.
நீங்கள், பல காலம் துன்பத்தில் இருந்து விடுபட பல்வேறு முயற்சி செய்தும் பலனின்றி, கடும் உடல் வலியிலும், மன உழைச்சல்களிலும், பொருள் இழப்பினாலும், நொந்துபோய் இறுதியில் இதையும் முயன்று பார்ப்போம் என உதவி நாடி இங்கு வருகிறவர்கள்.,
எனது மரபுவழி நலவாழ்வு மையத்தில் இருந்து திரும்பும் போது உடல் வலிகளும் , மன துன்பங்களும் இல்லாது மனதும் உடலும் லேசாகி மகிழ்வுடனும், தெளிவான இறை புரிதலுடனும் செல்வீர்கள் என உறுதியளிக்கிறேன்.
நான், இங்கு எனது மரபுவழி நலவாழ்வு மையத்தில், துயரரின் நோயைத் தடுப்பதற்கு, நோயை அழிப்பதற்கு அல்லது நோயை கட்டுப்படுத்துவதற்காக எந்த முயற்சியும் எனது படிப்பறிவை பயன்படுத்தி செய்வதில்லை.
துயரர் தங்களது உடனடி அல்லது நீண்டகால நோயிலிருந்து எளிதில் சுகம் பெற நான் வழி காட்டுகிறேன். நான் உடல், மன வலிகளில் இருந்து உங்களை விடுதலை செய்கிறேன். வாழ்வில் நம்பிக்கை கொடுக்கிறேன். உங்கள் உடல, மனத் துன்பங்களுக்கு முழுமையான தீர்வு தருகிறேன்.
நான், உங்கள் நலவாழ்வுக்குள் நீங்கள் திரும்ப மென்மையான வழியில், சுகமான வழியில் அன்புடன் உங்களை அழைத்துச் செல்கிறேன்.
நீங்கள் இங்கு வரும்போது, சுகம் பெற வேண்டும் என்ற விருப்பத்தோடும், தேவையோடும் வரவேண்டும். அப்போது தான், நான் இங்கு இறைவழியில் உங்களுக்குப் பெற்றுத் தரும் சுகத்தை; நீங்கள் நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொள்ள முடியும், மகிழ்ச்சி கொள்ள முடியும். பெற்ற சுகத்தை கொண்டாட முடியும்.
நான் நம் மரபின் அறிவியல் வழியில் உங்கள் உடல் இயல்புக்கு ஏற்ற பழக்க வழக்கங்களை உங்களுக்கு மீண்டும் கற்பிக்கிறேன்.
நான் இயற்கைவழியில், உங்கள் மனதின் கேடுகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை தருகிறேன். உங்கள் மனதின் இயல்பை திரும்ப பெற உதவுகிறேன். நான் உங்களுக்கு உங்களின் உயிர்த் தேவையான இறையாற்றலை, இறை உணவைப் மீண்டும் பெறும் வழியை உணர்த்தி பின் சொல்லித்தருகிறேன்.
நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்நாள் முழுமையும் இனிதாய் வாழத் தேவையான விழிப்புணர்வையும், புரிதலையும் நான் மீண்டும் உங்களுக்கு தருகிறேன்.
நான் இறைவழியில் இங்கு பெற்றுத் தரும் சுகத்தை, நீங்கள் வாழ்நாள் முழுதும் தக்கவைத்துக் கொள்ள வழி காட்டுகிறேன்.
வருக... இது ஓர் வாழ்வியல் பாதை.
இறைவழியில் நம் மரபுவழி சான்றோர்கள், அறிவர்கள் வாழ்ந்து கற்ற நலவாழ்வுக்கான புரிதல்களை, இறை ஞானங்களை நம் நண்பர்கள், உறவுகள், வாரிசுகளின் நலத்துக்காக பகிர்ந்து, பழகிக் கொள்வோம்.




அறிவர் வழி சுகமளித்ததல் காணொளிகள்
Tip: Use this area to describe one of your services. You can change the title to the service you provide and use this text area to describe your service. Feel free to change the image.





















