top of page

மரபுவழி வாழ்வியல் என்பது என்ன?
நமது முன்னோர்கள் இந்த உலகின் மிக பண்பட்ட, உயர்ந்த நாகரீகமும், நன்மையை மட்டுமே தரக்கூடிய அறிவியலும், தன்னை உணர்ந்ததால் வளர்ந்த ஆன்மீகமும், உற்பத்தி திறனும், நீர்மேலாண்மையும், கடலறிவும், வானியலும், இரசவாதமும், சாகாகலையும் என வாழ்வின் அனைத்து தேவைகளிலும் தனிச்சிறப்பு பெற்றிருந்தனர்
இன்றும் நவீன அறிவியல் உயர்தொழில்நுட்பம் எனும் ஆகாவழியைப் பின்பற்றுபவர்கள், மறைவாக நமது மூலவர்களிடம் தகவல்கள் அறியப் பாடாகபடுகிறார்கள். அவர்கள் தன்முணைப்பு, தற்பெருமை எந்த காலத்திலும் உலகுக்கு நன்மையைத் தரப்போவதில்லை.
நமது மரபின் நுட்பமான அறிவியலை தேடித் தொகுத்து பலரும் அறிய, எளிதாக பகிர்வதை நம் வலைத்ததளத்தின் முதல் நோக்கமாக கொள்கிறோம்.
உருவாக்கிய வாழ்க்கை முறையினை இந்த காலத்துக்கு ஏற்றார் போல, எளிமையாக பகிரலாம்.
தங்கள் தேவைகளையும், கருத்துகளையும், அனுபவங்களையும் வழங்கி தளத்தை சிறப்பிக்கத் தகுதியுள்ளோரை வரவேற்கிறேன்.
வீட்டு மருத்துவர்களான பெண்கள், முதியவர்களின் அறிவியல்
நம் மரபில், வீட்டில் ஒருவருக்கு உடல், மன குறைவு ஏற்பட்டால் வீட்டின் சமையல் அதற்கு தகுந்தார் போல மாறிவிடும். பாதிக்கப்பட்டவருக்கு நோய் சுகம் தந்து விலகுவதோடு மற்றவருக்கும் நன்மையான பலன்களை கொடுக்கும் வகையில் வீட்டின் அருகில் இருக்கும் மூலிகைகளை கையாள்வதோடு மருத்துவ பேழையான அஞ்சறைப்பெட்டியினை முழுமையாக பயன்படுத்த கற்றவர்கள் நமது முன்னோர்கள்.
இந்த அறிவுப்புதையல் வருங்கால சந்ததிகள் பெறும் வகையில் நேரடி, ஆன்லைன் வகுப்புகள், ஆலோசனைகள்
இரண்டு மணி நேரம் ஆன்லைன் வகுப்பு மூன்று நாள், ஓர் நபருக்கு ரூ 2,000 குறைந்தது பத்து நபர் கொண்ட குழுவுக்கு நடத்தப்படும்.
நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றது ஓர் நபருக்கு ரூ. 3,000
bottom of page








