அடிப்படைத் தேவைகளுக்கான உணவு. உடல் நலம், மன நலத்துக்கான உணவு.
- thamizhaveln
- Dec 25, 2025
- 1 min read
மனிதன் நலமாக வாழ அடிப்படையான தேவைகள். பசி. தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு, விழிப்புணர்வு, புரிதல், அமைதி போன்றவையாம்.
பசி, தாகம் என்பன நமது உடல் மற்றும் மனதின் தேவையைக் குறிக்கும் உணர்வுகள் ஆகும்.
ஐந்து மூலகங்களால் ஆன நம் உடல் தனது நலத்துக்காக இந்த ஐந்து மூலகங்களையும் சீராக வைத்திருக்க வேண்டியுள்ளது.
சுவையறிதல் எனும் ஆற்றல், இந்த மூலகத் தேவைகளை நமக்கு உணர்த்தி பொருந்திய உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது.
சுவைகளின் பயன்.
இனிப்புச் சுவை மண் மூலகத்தை வலுவாக்குகிறது மண்ணீரல், வயிறு எனும் சீரணத்துக்கான அடிப்படைக் கருவிகளை சீராக இயக்குகிறது. மன ஓர்மைக்கு காரணமாகிறது.
உவர்ப்புச் சுவை நீர் மூலகத்தை வலுவாக்குகிறது. மறு உற்பத்திக்கான கருவிகளான சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பையை சீராக இயக்குகிறது. மன தைரியத்தைக் கொடுக்கிறது.
கசப்புச் சுவை நெருப்பு மூலகத்தை வலுவாக்குகிறது. இதயம், சிறுகுடல், இதய உறை, வெப்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன சீராக இயங்க உதவுகிறது. மகிழ்வுக்கு காரணமாகிறது.
கார்ப்பு, துவர்ப்பு காற்று மூலகத்தை வலுவாக்குகிறது. நுரையீரலையும், பெருங்குடலையும் சீராக இயக்குகிறது.மன அமைதிக்கு காரணமாகிறது.
புளிப்புச் சுவை ஆகாய மூலகத்தை வலுவாக்குகிறது. கல்லீரல், பித்தப்பையை சீராக இயக்க உதவுகிறது. மன பொறுமைக்கு காரணமாகிறது.
மென்மை தேவை.
பசியும் தாகமும் உடல் தேவையின் மெல்லிய நுட்பமான உணர்த்துதல். இதை விழிப்புணர்வுடன் அவதானித்து நமது தேவைகளை மென்மையாக நிறைவேற்றுதல் வேண்டும்.
உதாரணத்துக்கு,
இனிப்பு சுவை தேவை என உடல் –மனம் கேட்கும் போது இரசாயன நஞ்சான சீனியை பயன்படுத்துவதா? இல்லை இயற்கையால் வந்த பனைவெல்லம், பழங்கள், தேன் பொன்ற நன்மை தருவதை பயன்படுத்துவதா?
உவர்ப்பு தேவையில், இரசாயன சேர்க்கையான அயோடின் கலந்த உப்பு நல்லதா இல்லை இயற்கையால் விளைந்த உப்பு நல்லதா? என முடிவு செய்தல் வேண்டும்.
கசப்பின் தேவையில் மென்மையான அளவுள்ள சுண்டைக்காய், பாகல் போன்றவை போதும். சிறியாநங்கையோ, வேப்பந்தழையோ உணவல்ல.
இரண்டாவதாக,
எவ்வளவு தேவை என அறியவும் சுவைத்தல் உதவுகிறது நாக்கில் தான் அளவையும் தரத்தையும் முடிவு செய்யமுடியும். வாயை மூடி கவணத்துடன்-சுவைத்து சாப்பிட்டால் தான் சுவை மற்றும் தேவையின் அளவு தெரியும். கவணமின்றி அள்ளி விழுங்கினால் உடலுக்கும் மனதுக்கும் சுமையாகும்-நஞ்சாகும்.
'சீரணம் விரல்களில் தொடங்கி நாக்கில் முடிகிறது'.
உணவு குறித்த பார்வையில் தற்போதய படிப்பறிவு மிக கேடானதாக விழிப்புணர்வின்றி உள்ளது.
பால், இட்லி, தோசை, வெண்ணெய், மைதா மாவு, கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகள், இரசாயனத்தால் தூய்மை படுத்தப்பட்ட உணவுகளும், நீரும். மெல்லிய கீரை போன்றவற்றை மென்மையான உணவு என நம்பி கெடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானதை நஞ்சென தவிர்த்தல் வேண்டும். பலவீனமான சீரணமுள்ளவர்கள் தொடவே கூடாது.
நெய், பழங்கள், பிஞ்சு காய்கறிகள், கொழுப்பு நீக்கப்படாத எண்ணெய், சிறு தானியங்கள் இயற்கை உணவுகள். தூயநீர் சூடாக்கப்படாமல் மண்பாணையில் குளிர்வித்துக் குடித்தல் நல்லது.
பசி, தாகம் அறிந்து பொருந்திய, தூய, எளிய உணவைத் தேர்ந்தெடுத்து படைப்பாற்றலுக்கு நன்றி உணர்வுடனும் அன்புடனும் உண்ண நலம் தரும










Comments