top of page
Search

அமுதம் பெருக்கி முதன்மை மருந்து

  • thamizhaveln
  • Jan 10
  • 4 min read

சுகம் பெற எளிய வழி - அமுதம் பெருக்கி

சுகம் பெற....



எனது மருத்துவ அனுபவத்தில், நான் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி பலரும் குணம் பெறுவதை கண்டிருக்கிறேன்.அவற்றில் சில எளிய முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி:



இது பெயருக்கேற்றார் போல் உடலில் தேங்கியுள்ள அனைத்து நஞ்சுக்களையும் மென்மையாக வெளியேற்றக் கூடியது.



.இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தில் கொட்டும் நஞ்சினால் உணவுப்பொருள்களில் தேங்கும்) பாதிப்புகளை நீக்கி வெளியேற்றுகிறது.



அதேபோல, உமிழ் நீரை அறுசுவைகளையும் சீரணிக்கத் தக்கதாக தேவையான அளவு சுரக்கச் செய்கிறது. உமிழ் நீரையே அமுதம் என்கின்றனர் சான்றோர். உமிழ் நீரே சீரணத்துக்கு அடிப்படை.



உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம், உடல் செல்களுக்கு போதிய ஆற்றல் இல்லாமையே. செல்களுக்கு ஆற்றல் தருவது உடல் உணவிலிருந்தும், நீரிலிருந்தும், காற்றிலிருந்தும், விண்ணிலிருந்தும் உடல் பிரித்தெடுக்கும் எரிசத்தியே. இந்த எரிசத்தி நமது உடலினால் மிக நுட்பமாகlத் தயாரிக்கப்பட்டு, பலத்த தரச் சோதனைக்குப் பின் தரமானதாக அறிவது பயன்படுத்தப்படுகிறது – எஞ்சுவது சேமித்து வைக்கப்படுகிறது. இது தேவையான போது உடலினால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது

பொருந்தாத உணவினாலோ, சுவைத்து உண்ணாததாலோ, உணர்வுகளின் பாதிப்பினாலோ, அல்லது உடல் சீரண உறுப்புகளின் பலவீனத்தாலோ தரமற்றதாக முடியும் எரிசத்தி- உடல் செல்களுக்கு ஏற்றதல்ல என்பதால்; உடல் அதைப் புறக்கணித்துக் கழிவுகளாக உடலை விட்டு வெளியேற்றுகிறது.



இந்த வகையில் உடலின் சீரணத்தை முறைப்படுத்தி, கழிவுகளையும் வெளியேற்றி நஞ்சுநீக்கி என்ற அமுதம் பயன் படுகின்றது.



இந்த மருந்தில் உள்ள மூலிகைகள் மற்றும் செய்முறை;

1.       அவுரி             - 1 பங்கு (உதாரணம் 20 கிராம்)

2.       அதிமதுரம்         - 2 பங்கு (40 கிராம்)

3.       அமுக்கரா         - 1 பங்கு

4.       மிளகு             - 1 பங்கு

5.       கடுக்காய்          - 1 பங்கு

6.       தான்றிக்காய்       - 1 பங்கு

7.       விளாமிச்சம் வேர்  - 1 பங்கு

8.       நன்னாரி           - கால் பங்கு (5 கிராம்)



இவற்றை தனித்தனியே கைபார்த்துப் பொடிசெய்து பின் சேர்த்து வைத்துக் கொள்க.



-   இந்த மருந்துக்கான அடிப்படை எனது ஆசான்களில் ஒருவரான சாமீ. அழகப்பனால் எனக்கு கிடைத்தது. இது அவரது தாத்தாவின் முறை இதை அவர் பாசாணங்களின் முறிவுக்கும், கடிநஞ்சு முறிவுக்கும் பயன்படுத்தி வந்தார்.



-   இதில் சிறு மாறுதல்கள் செய்து நான், அனைத்து நோய்களுக்கும் முதல் மருந்தாகப் பயன்படுத்துகிறேன். இதில் கிடைத்த நன்மைகளின் சிறப்புக் கருதி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



-   இந்த மருந்தை மட்டுமே பயன்படுத்தி சில வகைப் புற்றுநோய்கள், மூலம், கடும் தோல் நோய்கள், பலவகையான சுரங்கள் போன்றவற்றை முழுமையாகக் குணமாக்கிய அனுபவம் பல உண்டு.



-   பொதுவாக என்னிடம் சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இதன் சிறப்பு தெரியும்.



-   முன்பு, உணவுக்குப் பின் இதை பயன்படுத்தினேன். தற்போது பெற்ற அனுபவத்தால் இதை தொடர்ந்து சிறிதளவு உணவுக்கு முன் பயன்படுத்துவதால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடிகிறது.



-   நோயுள்ளவர்கள் பயன்படுத்தினால் அந் நோய்கள் சுகம் தந்து மறையும். நலமானவர்கள் பயன்படுத்தினால் எந்த நோயும் அணுகாது.



பயன்படுத்தும் முறை


உணவுக்கு முன் பழங்கள் உண்பது சிறப்பு. இயலாத நிலையில் அமுதம் பெருக்கியை உணவுக்கு முன் பயன்படுத்தலாம். 


பழங்கள் உணவுக்கு முன் உண்பவர்கள் அமுதம் பெருக்கியை உணவுக்குப் பின் பயன்படுத்துக.



மூன்று வேளையும் உணவுக்கு முன் அல்லது பின் ஒரு சிட்டிகை அளவு. (இரண்டு விரலால் எடுக்கும் அளவு) நாக்குக்கு அடியில் இட்டு சுவைக்கவும். நன்கு உமிழ் நீர் சுரக்கும். இதில் மருந்து கரைந்து முழுவதும் மறைந்தபின், உணவை வாயைமூடி சுவைத்துச் சாப்பிட்டால் போதும். 



இத்துடன் அடிப்படை நோயணுகா விதிகளையும் கடைப்பிடித்தால் எல்லா சுகமும் உங்களுக்கே.



நண்பர்களே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேளுங்கள் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.



நீங்கள் சுகம் பெற்ற அனுபவங்களை இங்கு பதிவு செய்தால் – பிறரிடம் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் நலம் பெறுவர்.



செய்முறை மிக எளிதே. தானே செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்னிடம் கேட்டால் செய்து அனுப்பி வைக்கிறேன்


.

தொடர்பு முகவரி.

ந. தமிழவேள், மரபுவழி நலவாழ்வு மையம், எண்;31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600054.

கைபேசி-93458 12080, 94447 76208.

அன்பை மறவா,

தமிழவேள நளபதி.

இடுகையிட்டது thamizhavel nalapathy நேரம் 7:37:00 PM

17 கருத்துகள்:

  1. குருவருள்24 செப்டம்பர், 2011 அன்று 11:38 AM

    ஐயா வணக்கம்,பதிவிற்க்கு நன்றி, தங்களை போன்ற நல்லோர்களை அடையாளம் கண்டு அனைவரும் தங்களுடைய நோய்களிலிருந்து குணமடையவும், மீண்டும் நோயணுகாமல் வாழவும்,எல்லாம் வல்ல குருவின் திருவடி பாதங்கள் பணிகிறேன்.குருவருள் காக்க,சரவணன்,நன்றி,

    பதிலளி

  2. பெயரில்லா26 செப்டம்பர், 2011 அன்று 8:30 PM

    வணக்கம் மீண்டும் உங்களை சந்திப்பதில்.பதிவு அருமை. இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு மருந்து.கடந்த ஒரு பதிவில் ஆங்கில மருத்துவம் எப்படி ஒரு நோயை கட்டுப்படுத்தவோ அதன் மூலத்தை அறியாமலோ உறுப்பை மட்டும் அறுக்கும் செயலை செய்கிறது என்பதை விளக்கினீர்கள்.நோயே வராமல் தடுக்கும் இந்த அருமருந்து பற்றி மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்.ஒரு சந்தேகம், எங்கள் குடும்ப உறுப்பினர் வயது 60 சர்க்கரை நோய் உள்ளது. தற்போது பல் வலி என்று மருத்துவரிடம் சென்றதில் அதை பிடுங்கி விட்டார்கள். மீண்டும் அடுத்த பல்லில் வலி...மறுபடியும் ஒரு பல் பிடுங்க பட்டது....இதற்கு ஒரு விடிவு தேடி உங்களிடம் வந்திருக்கிறேன்.தயவு செய்து இறை மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியுமா என்பதை தெரியப்படுத்தவும்.இது மட்டும் அல்ல, இன்னும் பல பிரச்சனைகளை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களை தினமும் பார்க்கிறோம். அத்துடன் நானும் வரும்முன் காப்போம் என்ற நிலையில் இருப்பதால்....உங்களை நேரில் தொடர்பு கொள்கிறேன்.தொடருங்கள் உங்கள் இறை சேவையை.நன்றி வணக்கம்.சரவணன், திருப்பூர்.

    பதிலளி

  3. thamizhavel nalapathy27 செப்டம்பர், 2011 அன்று 7:55 PM

    அன்பு சரவணன், திருப்பூர் அறிவது,தமிழவேள் வணக்கங்கள். தங்கள் கருத்துகளைப் பதிந்தமைக்கு நன்றி.உடலின் முக்கிய கருவிகளின் தொடர்புகள் பற்களுக்கு உண்டு. அக் கருவிகளின் பலவீனத்தையே பற்களில் காணும் தொல்லைகள் அறிவுறுத்துகின்றன.பற்களைப் பிடுஙுகும் போது உடல் முகாமையான உறுப்புகளுக்கு போகும் சத்திகளைச் சேதப் படுத்துகிறோம் என்பதே உண்மை.நோயணுகா விதிகளைப் பழகினால் இந் நிலை மாறும். பழகும் போது ஏற்படும் தொல்லைகளை நீக்க, நம்பிக்கையூட்ட இறைவழி மருத்துவம் உதவும்.வலியிருப்பின் எப்போது வேண்டுமானாலும் கைபேசியில் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்மை உண்டாகுக.நேரில் சந்திக்கும் போது விரிவாகப் பேசலாம்.அன்பை மறவா,தமிழவேள் நளபதிகைபேசி எண்; 9345812080மின்னஞ்சல்; thamizhavel.n@gmail.com

    பதிலளி

  4. holistic15 அக்டோபர், 2011 அன்று 3:14 PM

    Dear Dr,Kindly tell the combination in grams so that it will be easy for me.Thanking youS. Ananthakrishnan

    பதிலளி

  5. பெயரில்லா19 அக்டோபர், 2011 அன்று 9:41 AM

    வாசி யோகம் பற்றி சற்று விளக்குங்களேன் ஐயா

    பதிலளி

  6. பெயரில்லா19 அக்டோபர், 2011 அன்று 9:43 AM

    கடுக்காயில் பல வகைகள் உண்டு, இதற்கு எந்த வகை கடுக்காயை பயன்படுத்துவது?நன்றி

    பதிலளி

  7. thamizhavel nalapathy21 அக்டோபர், 2011 அன்று 6:56 PM

    நண்பர்க்கு,தமிழவேள் வணக்கங்கள். நன்றி.எனக்கு வாசியோக்ம் பற்றித் தெரியாது. இது குறித்து சாமீ அழகப்பன் அவர்களது மச்சமுனி வலைப்பூவில் அறியலாம்.கடுக்காய் கடையில் கிடைப்பதை பயன்படுத்துக. முற்றிய கடுக்காய், கொட்டை நீக்கிப் பயன்படுத்துக.அன்பை மறவா,தமிழவேள் நளபதி

    பதிலளி

  8. பெயரில்லா24 அக்டோபர், 2011 அன்று 9:06 PM

    அவுரி கிடைக்க சிறமமாக உள்ளது. இது இல்லாமல் மற்றவைகளை மட்டும் பயன்படுத்தலாமா?

    பதிலளி

  9. thamizhavel nalapathy25 அக்டோபர், 2011 அன்று 2:44 PM

    நண்பரே,அவுரி பச்சையாக கிடைக்கவில்லை எனில் கடையில் வாங்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.அன்பை மறவா,\தமிழவேள் நளபதி

    பதிலளி

  10. பெயரில்லா26 அக்டோபர், 2011 அன்று 7:25 AM

    நன்றி ஐயா.அவுரி, எங்கள் நாட்டில் உள்ள கடைகளில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வேறு ஏதாவது பயன்படுத்த முடியுமா அல்லது அது இல்லாமலும் பயன்படுத்தலாமா?

    பதிலளி

  11. pradeep18 நவம்பர், 2011 அன்று 3:20 PM

    thaamira valayam anivathu udalukku nallatha?silar kaalhalil thaamira valayam aninthu ullarhale !

    பதிலளி

  12. thamizhavel nalapathy24 நவம்பர், 2011 அன்று 10:50 AM

    அன்பு நண்பர்க்கு,தமிழவேள் வணக்கங்கள்.தாமிர வளையம் அணிவது பற்றி கேட்டிருந்தீர்கள். தாமிரச் சத்து உடலின் நரம்பு மண்டலத்தில் வேலை செய்வது அது நரம்புகளுக்கு வலிமை சேர்க்கும். இது குறித்து விரிவாக அறிந்து பின ஒரு முறை எழுதுகிறேன். வேலை பளுவால் தாமதமாகி விட்டது. அன்பை மறவா,தமிழவேள் நளபதி

    பதிலளி

  13. பெயரில்லா24 நவம்பர், 2011 அன்று 4:19 PM

    மதிப்புக்குரிய மருத்துவருக்கு,பித்தப்பை கற்களை முழுமையாக குணப்படுத்த முடியுமா? எங்கள் குடும்ப நண்பர்க்கு எதிர்மரையினர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துள்ளனர். அவருக்கு உங்கள் தொலைபேசி கொடுத்திருக்கிறேன். இந்த நோயை பற்றிய தங்களது கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.சபிதா சுவாமி..

    பதிலளி

  14. thamizhavel nalapathy27 நவம்பர், 2011 அன்று 7:50 PM

    அன்பு சபீதா சுவாமி அறிவது,தமிழவேள் வணக்கங்கள்.முழுமையாக உங்கள் நண்பரின் துன்பத்தை குணப்படுத்த முடியும். அவரை என்னிடம் தொடர்புகொள்ளச் செய்யுங்கள் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தையே கட்டுரையாக எழுதுகிறேன்.அன்பை மறவா,தமிழவேள்நளபதி

    பதிலளி

  15. Unknown10 ஜூன், 2012 அன்று 3:51 PM

    வனக்கம் ஐயயா,தங்கள் பதிவுகள் மிக மிக அருமை.தங்களிடம் இறை மருத்துவம் கற்க விரும்புகிறேன்.என் தொலைபெசி 09341966927. homeopathy practisஎ செய்கிறேன்.

    பதிலளி

  16. senthil29 நவம்பர், 2013 அன்று 12:59 AM

    ayya vanakkam sidha maruthuvathil udal uyaramaka valara ethum marunthu ullatha?

    பதிலளி

  17. senthil29 நவம்பர், 2013 அன்று 1:00 AM

    ayya vanakkam sidha maruthuvathil udal uyaramaka valara ethum marunthu ullatha?

 
 
 

Recent Posts

See All
தன்னை உணர மலர்கள் செய்யும் உதவி

மலர்களின் இயல்பு தனது வாரிசுகளுக்கு தன் முழுமையை  அகிலத்தின் நினைவகத்தில் விட்டுச் செல்வது ஆகும்.  மலர்களின் தூய்மையும்,  அழகும், மென்மையும் பார்ப்பவர்  தமது துன்பங்களை மறக்கச் செய்து அவர் உள் ஓர்  மல

 
 
 
செம்பரத்தை மணப்பாகு

செம்பரத்தை பூ  மணப்பாகு செம்பருத்தி என நாட்டு வழக்கில் அழைக்கப்படும்  நாட்டுச் செம்பரத்தை பூ மிக அழகிய மலர் மட்டுமல்ல, இது பல மருத்துவப் பயன் உள்ள மலர். இதயம்   இது இதயத்தை வலுவாக்குவதில் நிகரற்றது. இ

 
 
 

Comments


© 2026 by Ultrafast Healing Alchemy. Powered and secured by Wix

  • b-facebook
  • Twitter Round
bottom of page