செம்பரத்தை மணப்பாகு
- thamizhaveln
- Dec 25, 2025
- 1 min read
செம்பரத்தை பூ மணப்பாகு
செம்பருத்தி என நாட்டு வழக்கில் அழைக்கப்படும் நாட்டுச் செம்பரத்தை பூ மிக அழகிய மலர் மட்டுமல்ல, இது பல மருத்துவப் பயன் உள்ள மலர்.
இதயம் இது இதயத்தை வலுவாக்குவதில் நிகரற்றது. இதயத்தில் ஓட்டை விழுந்துள்ளது என கூறப்படும் துன்பத்தை கூட விரைவில் சரிசெய்யும். இதய நோய்கள் அனைத்திலும் சுகம் தரும்.
கல்லீரல் வீக்கத்தை சுகமாக்கும், கல்லீரல் வீக்கத்துடன் வரும் சுரத்தை நீக்கும். தசைகளின் சோர்வை நீக்கும் நல்ல ஞாபக சக்தியை தரும். உடல் எரிச்சல், மன எரிச்சல், உள்ளங்கால், கண்களில் வரும் எரிச்சலை போக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் பாத புண்கள், பெருவிரல் புண்களை ஆற்ற உதவும். சோர்வை நீக்கும். மன தைரியத்தை கொடுக்கும்.
மலேசியாவின் தேசிய மலராக உள்ளது.
மகளீர்க்கு வரும் மாதந்திர தூய்மையை முறைப்படுத்தும். கர்ப்ப பை மற்றும் சிணைப்பையை வலுவாக்கும்.
இதன் மகரந்தத்தை குழந்தை பெற விரும்புவோர் ஆண், பெண் இருவரும் சாப்பிட பெண்களின் சிணை முட்டை வலுவாகும், ஆண்களுக்கு வித்தாற்றல் மேம்படும்.
குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட நல்ல கல்வி ஞானமும், உடல் நலமும் கிடைக்கும்.
இதை சுவையான நல் உணவாக்கும் முறை செய்து உண்டு மகிழுங்கள்.
25 எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாற்றை வடித்து அதில், 100 செம்பரத்தைப் பூக்களின் இதழ்களை ஊற வையுங்கள். தினம் தோறும் சில முறை கரண்டியால் புரட்டி விடுங்கள். 3 நாளில் மசிந்து விடும். அதை துணியில் பிழிந்து வடித்து வையுங்கள்.
பின், இரும்புச் சட்டியில் ஊற்றி மெல்லிய தீயில் சூடாக்கி பின் சம அளவு நல்ல தேன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு மேல் பாதுகாத்து வைக்கலாம்.
இதில் 15 மில்லி முதல் 30 மில்லி வரை இரண்டு பங்கு தண்ணீர் கலந்து குடிக்க மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.
சித்த மருத்துவர்கள் நன்கு முடிந்த அயச் செந்தூரம் சேர்த்துக் கொடுக்கலாம்.
இத்துடன் திராசட்சை, மாதுளை, அத்தி, நாவல் இவற்றின் மதுச் சாரத்தையும் சேர்த்து கொடுக்கலாம்.
செம்பரத்தையை, அதன் மகரந்தத்தை மலர் நுண்சாரமாக்கி பயன்படுத்தும் போது சிறந்த பலன் தருகிறது.










Comments