உங்களுள் இருக்கும் இறையாற்றலை உணர்ந்து, மேம்படுத்தி, நிறைமனிதனாக மாற உங்களால் முடியும்.
- thamizhaveln
- Dec 15, 2025
- 2 min read
இறை ஆற்றல் பகிர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

நமக்குள்ள இருக்கிற அந்த இறைத்தன்மையை உணர்ந்தவங்களும் சரி, அதை வெளியில தேடுனவங்களும் சரி, பல யுகங்களாக மனிதர்கள் அந்தத் தேடல்ல இருக்காங்க. பல காலங்களாக இந்தத் தேடல் இருக்கு. இதுல நிறைய பேர் வெற்றி பெற்றாங்க.
நமக்கு எந்த அளவு அதுல ஆழமா போறோமோ, அந்த அளவு நமக்கு வெற்றி தான். நம்முடைய இயல்பான தேடல், இயல்பான புரிதல், நம்மள வந்து அந்த வெற்றிக்கு கொண்டு செல்லும்.
நம்முடைய... அதாவது நமக்குள்ள இருக்கிற அந்த இறைத்தன்மையை நாம உணரனும். அப்போ இறைக் குணங்கள் மூலமா அந்த இறைத்தன்மையை நாம அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
இந்த உலகப் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள் இதிலிருந்து விடுபட்டு, ஒரு அமைதியும், நிம்மதியும் தேட விரும்புற போதுங்க, தனக்குள்ள இருக்கிற அந்த இயல்பான உணர்வுகளை கண்டறிந்து, இதனுடைய சுகத்தை அனுபவிச்சு, அதை மற்றவங்க கிட்ட பகிர்ந்துக்கறாங்க.
இதன் மூலமா நம்ம வந்து, நமக்குள்ள இருக்கிற அந்த இறைத்தன்மையோட நாம ஒன்றிணையறோம். இது போதும், இது எளிமையான இந்த முறைகளை விட நமக்கு நல்ல மகிழ்ச்சியும், நிம்மதியும், நம்முடைய மனதுக்கும், ஆன்மாவுக்கும் ஒரு அமைதியையும் நிச்சயமா கொடுக்கும்.
அடுத்து இறந்து போன பிறகு ஒரு சொர்க்கத்துல ஒரு இடம் போகணும் அப்படிங்கறது எல்லாம் நம்மள சும்மா கற்பனையில, கதவுகளை காண வச்சிருக்காங்க. மனிதனா பிறந்தவன் இந்த உலகத்துல, இந்த உடலை அழியாம பாத்துக்கணும். நமக்குள்ள இருக்கிற அந்த இறை ஆற்றலோட தொடர்பு கொள்ளணும்.
உடலும், இறை ஆற்றலும் ஒன்னு சேரணும். அந்த ஆற்றலும், பொருளும் ஒன்னா சேரணும். ஆற்றலும், பொருளும் ஒன்னா சேரும் போது, அங்கே ஒரு முழுமை கிடைக்குது. அப்ப எதையும் சாதிக்கத் தக்க, எதையும் எல்லாம் வல்ல ஒரு இறை ஆற்றலைக் கொண்ட மனிதனாக, மனிதன் உருவாவான்.
இதைத் தான் மாமனிதத் தத்துவம்னு சொல்றாங்க. நிறைய பேர் அந்த நிறை மனிதனை உருவாக்குறதுக்கு, நிறைய முயற்சிகள் பண்ணாங்க. பண்ணிக்கிட்டே இருக்காங்க. அதை சித்தர்கள் ஒரு வழியில தேடுனாங்க, ஆய்வாளர்கள் ஒரு வழியில தேடுறாங்க, தமிழ் அறிஞர்கள் ஒரு வழியில தேடுறாங்க. நிறைய தேடல் இருந்துகிட்டு தான் இருக்கு.
நம்ம நமக்கான எளிய வழியா இத புரிஞ்சுருக்கோம். நமக்குள்ள இருக்கிற அந்த இறைக் குணத்த... இறை ஆற்றல் நமக்குள்ள இருக்கு அப்படிங்கறத உணர்றது, அந்த பேராற்றலோட ஒரு பகுதி தான் நம்ம என்பதை உணர்றது.
இரண்டாவது, நமக்குள்ள இருக்கிற ஆற்றலையும், உடலையும் ஒன்று சேர்க்கிறது. நம்ம உடலை அழியாம பாதுகாக்கிறது... பாதுகாக்கிறது அந்த ஆற்றலை எப்படி பயன்படுத்துறது? இது ரெண்டும் ஒன்னு சேர்ந்தாதான் வெற்றி பெற முடியும்.
அந்த பஞ்சபூதங்கள்ல பாத்தீங்கன்னா, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்னு சொல்லுவாங்க. மண்ணு... மண்ணும் நீரும் உடலா இருக்கு. ஆகாயமும் காற்றும் வெளியா இருக்கு, வெளியில இருக்கு, விண்ணாக இருக்கு. இது ரெண்டும் ஒன்றுக்கொன்று முரணானது.
ஆனா இந்த முரண வந்து நம்ம ஒன்றிணைக்க வேண்டும். ஏன்னா இந்த பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றுக்குள்ளயும் மற்ற பூதங்களோட தன்மைகள் இருக்கு. அதாவது மற்ற மூலகங்களோட தன்மைகள் இருக்கு. அதை சரியா உணர்ந்து, அதை கையாளுவது தான் வர்ம மருத்துவம், அக்குபஞ்சர், சித்த மருத்துவம், இதெல்லாம் வந்து அந்த நமக்குள்ள இருக்கிற அந்த பஞ்சபூதங்களை சரியா கையாளுவது தான்.
இப்போ இந்த பஞ்சபூதங்களை நம்ம எப்படி பாக்குறோம்னா, எண்ணங்களா பாக்குறோம். பொறுமை, தைரியம், தூய்மை, உறுதி, முழுமை அப்படின்னு பாக்குறோம். இதன் மூலமா நமக்குள்ள இருக்கிற அந்த முழுமையை அடையறதுக்கு, நாம முயற்சி பண்றோம்.
எனக்கு தெரிஞ்ச ஒரு உயர்ந்த, எளிய வழி இது தான் அப்படின்னு நினைக்கிறேன். எல்லாரும் இங்க தான் வந்து நிக்கிறாங்க. எனக்கு தெரிந்து ஆன்மீகத் தேடல்ல உள்ளவங்க, சரியான பாதையில போறவங்க, இந்த புரிதல்ல தான் வராங்க.
இதுல வெற்றி பெறணும். வெற்றி பெறறது வந்து, மொத மென்மையா தான் ஆரம்பிக்கணும். எவ்ளோ பெரிய பயணத்துக்கும், முதல் அடி மூலமா தான் நம்ம ஆரம்பிக்க வேண்டி இருக்கும். அது மாதிரி நம்ம துவங்குவோம்.
நம்முடைய நடைமுறை வாழ்க்கையில, நிகழ் காலத்துல நம்ம இருந்தா தான் வெற்றி பெற முடியும். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போக முடியாது.
நம்ம நமக்குள்ள இருக்கிற அந்த இறைத்தன்மையை, நம் நடைமுறை வாழ்க்கையில பயன்படுத்திப் பழகணும். அதோட ஒன்றி கலந்து பழகணும். அதுக்கு துணையா இறைவன் குடுத்திருக்கிற அந்த இயற்கையை, சக மனிதர்களை, பிற உயிர்களை நேசிக்கணும்.
எல்லாத்தோடையும் இணைஞ்ச ஒரு மகிழ்ச்சியான, ஒரு நிம்மதியான ஒரு சூழல் நம்ம உருவாக்கும் போது, அந்த சூழல் நம்மள இறை நிலைக்கு உயர்த்தும். அதை பழகுவோம். நன்றி நண்பர்களே."










நன்றி