top of page
Search

தூக்கம், ஓய்வு நலவாழ்விற்கு அடித்தளம்

  • thamizhaveln
  • Dec 25, 2025
  • 1 min read


படைப்பாற்றல் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத் தந்துள்ளது மனிதன் ஒன்றும் பெரிதாக உழைக்கத் தேவையே இல்லை.


தான் எனும் அகம்பாவத்தாலும், விழிப்புணர்வற்ற சுயநலத்தாலும், அடிமை மனோபாவத்தாலும், இயற்கையையும் சக மனிதர்களையும் மென்மையாக அணுகத் தெரியாது; உறக்கத்துக்கும் ஓய்வுக்கும் நேரமின்றி உழைத்தே கெடுகிறான்.


மனிதன் நவீனஅறிவியல் உயர் தொழில் நுட்பம் என நினைக்கும் அனைத்தும் அவனுக்கும் இயற்கைக்கும் இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலங்கினும் கேடான அடிமைத்தனத்தையும் ,அழிவையுமே மனிதனின் தற்பெருமைக்கு தன்டனையாக படைப்பாற்றல்  தந்துள்ளது.


ஏழை பணக்காரன் என வேறுபாடில்லாது துன்பத்தை தவிர எதையும் கொடுக்கவில்லை மனிதனின் இந்த இயற்கையின் மீதான தூய்ப்பு வெறி.

தூக்கம், ஓய்வு மனிதனின் உடலையும் மனதையும் புதுப்பிக்கிறது. இரவுத் தூக்கத்தை பகல் தூக்கம் ஈடு செய்யாது. 


இரவுத் தூக்கத்தை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும் நடைபிணங்களாகவும், மனநோயாளிகளாகவும் மாறி வருகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர்களின் பெற்றோர்களும் நோயாளிகளாய் உள்ளனர்.


மக்களின் நலம் பேணும் பல நாடுகளில், மாலை 7 மணிக்கு மேல் அலுவலகங்களோ, கடைகளோ, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ இயங்குவதில்லை. காலை 4.00 மணிக்கு மேல் உறங்குவதும் இல்லை. 7.00 மணிக்கு மேல் வீட்டில் தூங்குபவர்களும் அங்கில்லை,


இரவு விளக்கு வைக்கும் முன் உணவருந்திவிட்டு முன்னிரவில் படுங்கள், காலை கோழி கூப்பிட எழுந்து விடுங்கள் என நம் ஊர்ப் பெரியவர்கள் கூறுவது இன்னும் காதுகளில் மறையவில்லை. அவர்கள் வசதியில்லாமல் அப்படிக் கூறவில்லை. தனது ஞானங்களால் உணர்ந்த அறிவியல் உண்மையையே கூறினர். இரவு தூங்காத ஒரு ஆரோக்யமான நபரையும் நான் பார்த்ததில்லை.


நாம் ஓட்டு மொத்தமாக நலவாழ்வுக்கான விதிகளை மறந்துவிட்டு, நமது பிள்ளைகளுக்கும் மறைத்துவிட்டு அவர்களை அழிவுப் பாதையில் வேகமாக இழுத்துச் செல்கிறோம். நமது வருங்கால வாரிசுகளில் யாராவது நமது அறியாமையின் - பொறுப்பின்மையினால் ஏற்பட்டிருக்கும் அழிவில்  இருந்து பிழைத்திருந்தால்  நம்மை மன்னிக்க மாட்டார்கள்.


நான் இதை மிகையாக கூறவில்லை. நமது தமிழகத்தின் கடற்கரையோர இரசாயன ஆலைகள்- நவீன அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களைப் பாருங்கள் ; நமது வீட்டில் உள்ளவர்கள் உடல் நலத்தைப் பாருங்கள் புரியும்.


 


 

 
 
 

Recent Posts

See All
அமுதம் பெருக்கி முதன்மை மருந்து

சுகம் பெற எளிய வழி - அமுதம் பெருக்கி சுகம் பெற.... எனது மருத்துவ அனுபவத்தில், நான் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி பலரும் குணம் பெறுவதை கண்டிருக்கிறேன்.அவற்றில் சில எ

 
 
 
தன்னை உணர மலர்கள் செய்யும் உதவி

மலர்களின் இயல்பு தனது வாரிசுகளுக்கு தன் முழுமையை  அகிலத்தின் நினைவகத்தில் விட்டுச் செல்வது ஆகும்.  மலர்களின் தூய்மையும்,  அழகும், மென்மையும் பார்ப்பவர்  தமது துன்பங்களை மறக்கச் செய்து அவர் உள் ஓர்  மல

 
 
 

Comments


© 2026 by Ultrafast Healing Alchemy. Powered and secured by Wix

  • b-facebook
  • Twitter Round
bottom of page