நான் மூன்று வகையில் நலவாழ்வைப் பார்க்கிறேன்
- thamizhaveln
- Dec 25, 2025
- 2 min read
நான் மூன்று வழியில் நலவாழ்வை பார்க்கிறேன்.
மனித உடலை - தன்னைத் தானே சுகப்படுத்திக் கூடியதாக, பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையதாக இறைவன் படைத்துள்ளான்.
மனித மனம் - நன்மை தீமையைப் பிரித்துணரக்கூடியது, நன்மையை நாடுவதால் சுகமாக - செம்மையாகக் கூடியது.
மனிதனின் ஆன்மா - இறைஞானங்களைக் கோண்டு மனதை நெறிப்படுத்துவது. இறையுடன் உள்ள தொடர்பால் தன்னை சுகமாக்கி கொள்ளும்.
ஆன்மா, மனம், உடல் இவை மூன்றும் இணைந்ததே மனிதனின் நான் எனும் இறைத்துளி.
மனிதனின் நான் தனது இயல்பான இறைத் தன்மையுடன் இருக்கும் போது மகிழ்வுடன் இருக்கும். எல்லாம் வல்லதாக இருக்கும். இறைவன் படைப்புகள் அனைத்தோடும் ஒத்தியைந்து சாந்தமும் சமாதானமும் மிக்கதாக இருக்கும். நானின் ஓர்மையுடன் கூடிய இருப்பே நலவாழ்வு.
படைப்பின் விளையாட்டால் - தன் படைப்பை சுவைக்க, தன்னை தானே உணர பிரிந்த இறைத்துளிகள் வாழ்வின் அனுபவத்துக்குப் பின் மீண்டும் இறையுடன் இணைவதே வாழ்வெனும் பயனம்.
எனது எனும் மாயையால்; செய்யும் செயல்களின் விளைவும், தான் எனும் செறுக்கும் இறைவனிடமிருந்து பிறந்த நான் துன்பம் அடைய காரணமாகிறது.
நன்மை, தீமைகளைப் பிரித்தறிய கொடுக்கப்பட்டதே பகுத்தறிவு. நான் இதில் நன்மையை நாடினால் நலம்.
இறைவன் நன்மைக்காக இறக்கும் எண்ணங்களை, வசதிக்காக நல்லது, கெட்டது என பிளவுண்ட மனதால் பிரித்துப் பார்த்தால் முழுமைக்கு எதிரானவர்களாகி முரண்பாடுகளில் சிக்க வேண்டியுள்ளது.
அறியாமை, பயம், கவலை, வெறுப்பு, தனிமை, சுயநலம், விழிப்பிண்மை போன்ற மனதின் கேடுகளால் நானின் - ஆன்மாவின் இயல்புக்கு எதிராக மனம் செயல்படுகிறது.
இதை சரி செய்ய இறையருளால் தற்காப்பு அமைப்பு உடல், மன துன்பங்களை ஏற்படுத்துகிறது. இத் துன்பங்கள் மூலம் நமது தவறுகளை உணர்த்தவே, சரி செய்யவே, இறையன்பு விளைகிறது.
மனிதன் செறுக்கின் மிகுதியால், மனம் போன போக்கில் போய், தன்னைச் சரிசெய்யவில்லை என்றால் இறையுடனான இடைவெளி அதிகரிப்பதால் ,அதற்கேற்ப மனிதனுக்குத் துன்பங்களும், வலிகளும், கேடுகளும் சூழ்கிறது.
தன்னை உணர்ந்த மனிதன் தனது மனதின் கேடுகளை நீக்கி இறைவழியில் தனது இயல்பை புதுப்பித்துக் கொண்டு, இறையச்சத்துடன் நலமாக வாழ்கிறான்.
பட்டும் தெளியாத அளவு மனதின் கேடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்க, மன எண்ணங்களை சீராக்க இறைவன், எத்தனையோ வழிகளையும், மூலிகை மலர்களையும், நல்ல மீட்பர்களையும், கொடுக்கிறான்.
எந்த வழியிலாவது தனது குழந்தைகளை நல்வழிப் படுத்த, தம்மிடம் மீட்க இறையாற்றல் விரும்புகிறது.
இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் வகுத்த வாழ்க்கை முறைகள், உடலைப் பேணவும், மனதை செம்மையாக்கவும், இறையை அடையவும் உதவுகின்றன.
தன்னை உணர்ந்து இன்புற்ற சித்தர்கள், மதில் மேல் பூணைகளாக நிற்கும் தேடுபவர்களுக்கு, தாம் சென்ற வழியை காட்டவே, மரபுவழி மருத்துவ-வாழ்க்கை நெறிகளை தொகுத்து அளித்துள்ளனர்.










Comments