மனிதன்; உடலாக இருக்கும் அறிவாற்றல்
- thamizhaveln
- Dec 24, 2025
- 1 min read
மனிதன் என்பவன் உடலாக இருக்கும் அறிவாற்றல் தான்.மனிதரின் நலன் என்பது அறிவாற்றலின் நலனை குறிப்பது தான்.அறிவாற்றல் உயிர்மூல ஆற்றலோடு தொடர்பில் இருக்கும் வரை பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.
தனது மையத்துடன் உள்ள தொடர்பினை தனது பலவீனமான குழந்தைப் பருவத்தால் தொலைத்த மனிதன் காலத்தின்

சூழலால் தன்னை மறந்து சமூகத்துக்கு அடிமையாக வாழ்கிறான். இவனது அடிமை நிலை தான் மனிதனின் அனைத்து துன்பத்துக்கும் காரணம்.
தனது துன்பங்களைத் தீர்த்துக்கொள்ள, வருமுன் காக்க மனித உடலும், மனமும் செய்யும் செயல்கள் தான் மனிதனது நோய்கள்.
புறச் சூழல் காரணமாக வரும் துன்பங்களை தீர்க்க உதவும் வழி. அக சூழல் காரணமாக வரும் துன்பஙலளை தீர்க்கும் வழி குறித்து விரிவாக பார்ப்போம்.
புறச்சூழல் என்பது இயற்கை சூழல் மாற்றங்களால் ஏற்படுவது. இந்த சூழலில் உடல் எப்படி செயல்படுகிறது என கவனித்து உடலுக்கு உதவுவதே சரியானது.
அகச் சூழல் என்பது நமது இயல்பான குணங்களுக்கும் இந்த சமூகம் நம் மீது தினித்து வைத்துள்ள மனக் கேடுகளுக்கும் இடையே உள்ள முரண்களால் உருவாவது.
மேற்கண்ட புரிதலின் அடிப்படையில் உருவானதே உயிர்மூல ஆற்றல் சிகிச்சை முறை.
உயிர்மூல ஆற்றல் தொடர்பில் உள்ள குறைவை அடையாளப்படுத்தவே நோய்கள் உருவாகிறது. நமது உயிர்மூல ஆற்றல் உடனான தொடர்பை சீர் செய்தவுடன் நோய்கள் சுகம் தந்து விலகிவிடுகின்றன.
''தீதும் நன்றும் பிறர்தர வாரா’’என்பதற்கினங்க நமது உயிர்மூல ஆற்றலுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டால் அனைத்துவிதமான நோய்களும் ( விபத்து, ஆரம்ப நிலை நோய்கள், நாள்பட்ட நோய்கள், மன நோய்கள், தொற்று நோய்கள், மரபுநோய்கள், திடீர் என உருவாகும் நோய்கள் என அனைத்தும்)
சுகம் கிடைத்த பின் நாம் உயிர்மூல ஆற்றலுக்கு நன்றியுடனும், பணிவுடனும், உண்மையாகவும் இருப்பின் மீண்டும் நோய்கள் நம்மை அண்டுவதில்லை
,










Comments